உக்ரைன் - ரஷ்யா போரை தடுக்க டொனால்ட் ட்ரம்பின் நூதன யோசனை..?

trumpadvicerussianwar trumpjoebiden chinaflagamericaflight
By Swetha Subash Mar 07, 2022 02:43 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது குடியரசுக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து பேசிய டிரம்ப், "ரஷ்யா மீது எந்தக் காரணத்தை கொண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதிபர் ஜோபைடன் கூறுகிறார்.

முதலில் ஜோபைடன் இவ்வாறு நிறுத்த வேண்டும்.ரஷ்யா தொடர்ந்து அத்து மீறி வருகிறது இவ்வாறு நடைபெற நாம் விடக்கூடாது எனக் கூறினார்.

மேலும் , நேட்டோ என்பது வெறும் காகிதப் புலியாக செயல்பட்டு வருவது வருத்தமளிப்பதாக கூறிய டிரம்ப் கிண்டலாக உக்ரைன் போரை நிறுத்த ஒரே வழிதான் இருக்கிறது.

அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். பிறகு ரஷ்யாவும், சீனாவும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும்.

நாம் நிம்மதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்" எனக் கூறினார். டிரம்பின் இந்த பேச்சால் அரங்கம் முழுவதும் பெரும் சிரிப்பலை வெடித்தது.