ட்ரம்ப்புக்கு கொரோனா வந்தபோது வெண்டிலேட்டர் வரை சென்றார்: புதிய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். ட்ரம்ப்புக்கு அமெரிக்க அரசின் வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.ட்ரம்ப் ஆரம்பம் முதலே கொரோனாவை அலட்சியமாக கையாண்டு வந்தார். கொரோனா கட்டுப்பாடுகளை ஆரம்பம் முதலே ட்ரம்ப் புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரம்ப்பின் உடல்நிலை அவர் சொல்லியதை விடவும் மிகவும் மோசமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு கட்டத்தில் ட்ரம்ப்பை வெண்டிலேட்டரில் பொறுத்த வேண்டிய தேவை கூட எழுந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப்பின் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்ததாகவும் அவருடைய நுரையீரல் நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.