கவலைப்படாதே அம்மா.. நான் உன் பின்னாடி வந்துட்டேன் - நடிகை சமந்தா நெகிழ்ச்சி

Samantha Tamil Cinema Naga Chaitanya Marriage
By Thahir Jan 14, 2023 11:16 AM GMT
Report
150 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா.

நடிகை சமந்தாவுக்கு நோய் பாதிப்பு 

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்வில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்தனர்.

Don

இந்த நிலையில், தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் சமந்தா கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நெகிழ்ச்சி பதிவு 

இதனிடையே சமந்தா நடித்த சாகுந்தராமின் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். சூட்டிங் இல்லாத நிலையில் தனது ஓய்வில் சமந்தா கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Don

அவர் தனது வீட்டில் உள்ள சோபாவில் படுத்திருக்க அவரது செல்ல நாய்கள் அவர் அருகில் அமர்ந்துள்ளது. “கவலைப்படாதே அம்மா.. நான் உன் பின்னாடி வந்துட்டேன்” என்று நாய் சொல்வது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சமந்தா.