திருமணம் என்று டார்ச்சர் பண்ணாதீங்க - குடும்பத்தினருடன் சிம்பு மோதல்?
திருமணம் திருமணம் என்று பிள்ளைகளை டார்ச்சர் செய்ய வேண்டாம் என பெற்றோருக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டார்ச்சர் செய்ய வேண்டாம்
இதனை முன்னிட்டு படத்திற்கான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடைபெற்றது.
அதில் கமல்ஹாசன், யுவன், ஆர்.ஜே.பாலாஜி, ஜீவா என பலர் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார்கள். அதில் பேசிய சிம்பு திருமணம் திருமணம் எனக் கூறி பிள்ளைகளை டார்ச்சர் செய்ய வேண்டாம் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சிம்பு ” நான் எல்லா பெற்றோர்களிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் பிள்ளைகளை திருமணம், திருமணம் எனக் கூறி அவர்களை தயவு செய்து டார்ச்சர் செய்ய வேண்டாம்.
சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் நிறைய தவறான திருமணங்கள் நடக்கின்றது. பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளட்டும். மேலே இருப்பவர் பார்த்து ஒருவரை அனுப்புவார்” என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.
அண்மையில் நடிகர் சிம்புவின் அம்மா சொந்த ஊரான மயிலாடுதுறையில் சிம்புவுக்கு பெண் பார்க்க செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு இவ்வாறு பேசியது குடும்பத்தினரிடம் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.