அஜித் பேச்சை கேட்காதீங்க...உயிரிழந்த ரசிகரின் அம்மா கதறல்
துணிவு திரைப்படத்தை பார்க்க சென்ற அஜித் ரசிகர் லாரியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் அவரது தாய் நடிகர் அஜித் பேச்சை கேட்காதீங்க என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.
அஜித் ரசிகர் உயிரிழப்பு
நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் நேற்று வெளியானது.
இதே நேரத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் நேற்று வெளியாகிதால் 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியாகின. ரோகினி தியேட்டரில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியானது.
அப்போது படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் ஓடும் லாரியில் ஏறி நடனமாடிய நிலையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்பவர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அம்மா கண்ணீர் மல்க வேண்டுகோள்
தனது மகன் இறந்த நிலையில், அவரது அம்மா இளைஞர்களுக்கு ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார்.
அப்பா, அம்மா பேச்சை கேட்டு வீட்டோடு இருங்க சாமி....சாமி பிள்ளைங்களே கெட்டு போயிடாதீங்க...நீங்க நல்லா இருக்கனும்...வண்டியை பாதுகாப்பா ஓட்டுங்க என கண்ணீர் மல்க வாலிபர்களையும், இளைஞர்களையும் கேட்டுக்கொண்டார்.