பட்டப்பகலில் படுகொலை.. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா?அண்ணாமலை!

M K Stalin Tamil nadu DMK K. Annamalai
By Vidhya Senthil Mar 20, 2025 02:21 AM GMT
Report

 தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

 சட்டம், ஒழுங்கு

ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில் படுகொலை.. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா?அண்ணாமலை! | Don T Know There Is Such A Thing As Law And Order

நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை.காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை.இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா திரு ஸ்டாலின் அவர்களே? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.