? Live: புயல் கரையை கடக்கும் போது இதை மட்டும் செய்யாதீங்க - தமிழக அரசு வேண்டுகோள்
புயல் கரையை கடக்கும் சமயத்தில் மொட்டை மாடியில் நிற்க கூடாது, தேவையற்ற பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழக அரசு அறிவுறுத்தல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க தமிழக பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, புயல் கரையை கடக்கும் சமயத்தில் மொட்டை மாடியில் நிற்க கூடாது, தேவையற்ற பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,
கடற்கரைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும், பழைய கட்டடம் மற்றும் மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
2/2 pic.twitter.com/uNLUHc69qz
— TN DIPR (@TNDIPRNEWS) December 9, 2022