ஜால்ட்ரா அடிக்காதே... ஜால்ட்ரா அடிக்காதே...கொந்தளித்த ஜெயக்குமார் - கோஷமிட்ட அதிமுக தொண்டர்கள்
அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்திய எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யபட்டனர்.
அதிமுகவினர் கைது
சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்யக் கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை சபாநாயகர் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர். பின்னர் இன்று காலை அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அவர்களை கைது செய்தனர்.
அப்போது போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் அரசுப் பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

அப்பொழுது முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
அந்த கோஷத்தில் ஜால்ட்ரா அடிக்காதே... ஜால்ட்ரா அடிக்காதே...ஆளும் கட்சிக்கு ஜால்ட்ரா அடிக்காதே... என கோஷங்களை எழுப்பினார்.