சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் எப்போது? - வெளியான புதிய தகவல்

Sivakarthikeyan டான் Priyankamohan
By Petchi Avudaiappan Nov 30, 2021 04:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் முடிந்துள்ளன. டிசம்பர்,ஜனவரியில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் டான் திரைப்படத்தை வெளியிட சரியான நேரத்தை படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

இத்திரைப்படம், காமெடி மற்றும் காதல் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தை காதலர் தினத்தில் அதாவது பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.