சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; உற்சாகத்தில் ரசிகர்கள்

announced movie update actor sivakarthikeyan don film don release date
By Swetha Subash Jan 31, 2022 06:36 AM GMT
Report

‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்திகேயன் அறிவித்தார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அடுத்ததாக நடித்துள்ள படம் தான் ‘டான்’.

இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ புகழ் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், டான் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்திகேயன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

அதன் படி டான் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 25-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.