கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து பயங்கர விபத்து; கவர்னர் மரணம் - 124 பேர் பலி
கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேளிக்கை விடுதி விபத்து
டொமினிகன் ரிபப்ளிக் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதில் பிரபலங்கள், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பொதுமக்கள் என சுமார் 500 முதல் 1,000 பேர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி அதிகாலை வரை நீடித்துள்ளது.
124 பேர் பலி
அப்போது விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். உடனே சம்பவம் குறித்து அறிந்து விரைந்த மீட்புக்குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். முன்னரே பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த 160 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களில் மாண்டே கிறிஸ்டி மாகாண கவர்னர் நெல்சி குரூஸ், முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரருமான ஆக்டேவியோ டோட்டல் ஆகியோரும் அடங்குவர்.