உத்தரபிரேதேசத்தில் டால்பினை கோடாரியால் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

dolphin-sea-arrest
By Jon Jan 09, 2021 12:17 PM GMT
Report

உத்தரபிரேதேச மாநிலத்தில் இரக்கமின்றி கோடாரி மட்டும் கட்டையால் டால்பினை அடித்து கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் கடந்த 31-தேதி ஆற்றின் கால்வாயில் ஒரு கங்கை டால்பினை 5-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கோடரி மற்றும் கட்டையை கொண்டு அடித்து கொன்றனர்.

பின்னர், வனத்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்தபோது டால்பின் உயிரிழந்து இருந்ததாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.\

இதுகுறித்து அருகில் இருந்த கிராமத்தினர் யாரும் நடந்த சம்பவம் பற்றி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் டால்பினை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு 3 இளைஞர்களை போலீசர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாக்கப்பட்டு வரும் உயிரினத்தை இப்படி இரக்கமில்லாமல் கொன்ற இவர்களை என்னவென்று சொல்வதென மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.