இது மாத்திரையா இல்லை பாகுபலியா ? ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் டோலோ 650 மீம்ஸ் !

twitter memes dolo650 trend
By Irumporai Jan 08, 2022 03:48 AM GMT
Report

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி,மும்பை,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 10 நாட்களில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 இந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் கொரோனா பரவல் அதிகமான உடன் டோலோ 650 மாத்திரை தொடர்பான மீம்ஸ்களும் அதிகமாக பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் காய்ச்சலுக்கு பலரும் டோலோ 650 மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.ஆகவே அந்த மாத்திரை தொடர்பாக ட்விட்டரில் மீம்ஸ்கள் அதிகம் பதிவிடப்பட்டு வருகின்றன. 

அதே சமயம் மக்களே,   நிஜமாகவே உங்களுக்கு காய்ச்சல் வந்தால் உடனே டாகடர பாருங்க அதுதான் safety , இது ட்ரெண்டிங் மட்டும் தான் என்பதை சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் .