27 நாட்கள்.. 64 கி.மீ தூரம் பழைய ஓனரை தேடிச்சென்ற நாய் - மனதை உருக்கும் சம்பவம்!

Ireland
By Sumathi May 01, 2023 10:15 AM GMT
Report

27 நாட்கள் கடந்து பழைய ஓனரின் வீட்டுக்கு சென்ற நாயின் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கூப்பர் 

அயர்லாந்து, டோபர்மெர் என்ற நகரைச் சேர்ந்தவர் நிகேல் என்ற புகைப்படக் கலைஞர். இவர் நாய் ஒன்றை அருகிலிருக்கும் கடையிலிருந்து வாங்கி கூப்பர் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார். அவரது வீட்டில் ஏற்கனவே மோலி என்ற நாய் இருந்துள்ளது.

27 நாட்கள்.. 64 கி.மீ தூரம் பழைய ஓனரை தேடிச்சென்ற நாய் - மனதை உருக்கும் சம்பவம்! | Dog Walk 64 Km 27 Days To Reach Old Owner Ireland

இந்நிலையில், இரண்டு நாய்களையும் காரில் வெளியில் அழைத்து சென்றிருக்கிறார். கார் கதவைத் திறந்ததும் கூப்பர் வேகமாக ஓடியிருக்கிறது. நிகேலால் விரட்டி சென்று கூப்பரை பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நாய் கூப்பரை காணவில்லை என நிகேல் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

நெகிழ்ச்சி சம்பவம்

ஆனால் அதுகுறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. 27 நாட்களுக்கு பிறகு கூப்பர் டோபர்மோர் என்ற பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, நிகேல் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில், காடு, மலைகள், கரடு முரடான சாலைகள், டிராஃபிக் ஆகியவற்றைக் கடந்து உணவு, தண்ணீர் இல்லாமல் 64 கிலோமீட்டரை 27 நாட்களில் கடந்து பழைய ஓனரை தேடிச் சென்றுள்ளது. தற்போது கூப்பர் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.