நாயின் வயிற்றில் 24 சாக்ஸ்.. மருத்துவர்களை மிரளவைத்த சம்பவம்- பகீர் பின்னணி!
நாயின் வயிற்றில் 24 சாக்ஸ் சிக்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா
ரஷ்யாவில் உரிமையாளர் ஒருவர் தனது செல்ல பிராணி லூனா என்ற பெர்னீஸ் நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வயிற்று வலி, வாந்தி, சோம்பல் உள்ளிட்டவையால் உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் உரிமையாளர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நாயை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது நாயின் வயிற்றில் கட்டி போன்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
24 சாக்ஸ்
அப்போது நாயின் வயிற்றில் 24 சாக்ஸ், ஹேர் டைகள் மற்றும் துணிகள் உட்பட வியக்கத்தக்கப் பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக லூனாவின் வயிற்றைச் சுத்தம் செய்ய ஒரு காஸ்ட்ரோடமி மற்றும் குடல் அடைப்பை ஏற்படுத்திய பொருட்களை அகற்ற என்டோரோடமி ஆகிய முக்கிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது லூனா குணமடைந்த நிலையில் நன்றாக இருக்கிறாள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.