நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
காஞ்சிபுரம் அருகே நாயை அடித்துக் கொன்ற மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே மாங்காடு அடுத்த கெருகம்பாத்தை சேர்ந்த சத்தியராஜ் (வயது 30) என்பவர் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு தினந்தோறும் உணவு வைத்து வந்துள்ளார் .
இப்படியிருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு வைக்கும் போது அங்கு உணவு சாப்பிட வரும் ஒரு நாய் இல்லாததை கண்டு பதற்றமடைந்தார் . அந்த நாயை தேடி பார்த்தபோது அங்குள்ள தனியார் நிறுவனத்திற்குள் இருந்தது தெரியவந்தது.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது நாய் பலமாக தாக்கப்பட்டு, முன் கால்கள் இரண்டும் உடைந்த நிலையில் முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் படுத்து கிடப்பதை பார்த்து திடுக்கிட்டார் . அப்போது அந்த நிறுவனத்தில் இருந்தவர்களிடம் கேட்டபோது நிறுவனத்திற்குள் நாய் புகுந்ததால் அங்கு இருந்த ராஜேஷ், கீர்த்தி மற்றும் ரஞ்சித் போன்றோர் இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கியது தெரியவந்தது.
அதனையடுத்து அந்த நாயை மீட்ட சத்யராஜ் அனுமதித்தார் சிகிச்சைப் பலனின்றி அந்த நாய் உயிரிழந்தது. இந்த நிலையில் நாயை அடித்துக் கொன்ற அந்த 3 பேர் மீதும் சத்யராஜ் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் காரணமாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.