தனியாக சிக்கிய இளம் பெண்- முகத்தை கடித்து கொடூரமாக தாக்கிய நாய் கூட்டம்
ரஷ்யாவில் தனியாக சிக்கிய இளம் பெண் ஒருவரை ஒரு கூட்டம் தெரு நாய்க்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கி, முகம் சிதைந்து குற்றுயிராக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின் உலான் உடே நகரில் டயானா என்ற பெண் தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது 10க்கும் மேற்பட்ட தெரு நாய் கூட்டம் இருந்துள்ளது. டயானா அந்த தெரு வழியாக நடந்து சென்ற போது அந்த நாய் கூட்டம் டயானாவை சுற்றி கடிக்க தொடங்கியது. நாய் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட டயானாவால் தப்பிக்க முடியவில்லை. உடனே அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.
அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் ஓடி வந்து வெளியே பார்த்தனர். நாய்கள் டயானாவை வெறித்தனமாக கடித்துக் கொண்டிருந்தன. உடனே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து நாய் கூட்டத்தை அடித்து துரத்தினர். உடனே டயானாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து டயானாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். நாய்களின் வெறித் தாக்குதலில் டயானாவின் உடலில் பலத்த காயம் அடைந்தார். டயானாவின் முகம் மொத்தமாக சிதைந்து போயுள்ளது. சதைப்பகுதி மொத்தமும் பறிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உடல் முழுவதும் நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. டயானா தற்போது அடையாளம் காண முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தற்போது மருத்துவ ரீதியான கோமா நிலையில் வைத்து சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சுமார் 10 நாய்களை சுட்டுகொன்றனர்.
கொல்லப்பட்ட நாய்கள் ஏற்கனவே ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
டயானாவை நாய்களிடமிருந்து காப்பாற்றிய பெண் ஒருவர் கூறுகையில், ஒரு அலறல் சத்தம் கேட்டது. நான் வெளியே என்று பார்க்கும் போது, நாய்களிடம் சிக்கி ஒருவர் போராடுவதை பார்த்தேன்.
நாய்களை துரத்திவிட்டு, அருகே சென்று பார்த்த போது, உடல் முழுவதும் காயங்களுடன், உடைகள் பறிக்கப்பட்டு நிர்வாணமாக, ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டதாக கூறினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.