சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த நாய் - வியந்து போன அதிகாரிகள்..!

Viral Photos Bihar
By Nandhini 1 மாதம் முன்

பீகாரில் டாமி என்ற நாய் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த நாய்

பீகார், கயாவில் ‘டாமி’ என்ற நாய் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. ஜாதிச் சான்றிதழுக்கான வினோதமான விண்ணப்பத்தைப் பெற்ற அதிகாரிகள் திகைத்துப் போனார்கள்.

இன்னொரு விஷயம் என்றால், நாய் டாமிக்கு சொந்தமாக ஆதார் அட்டை உள்ளது. அந்த ஆதார் அட்டையில் நாயின் படம் உள்ளது. டாமியின் தந்தையின் பெயர் ஷெரு என்றும், அவரது தாயின் பெயர் ஜின்னி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் டாமியின் பிறந்த தேதி ஏப்ரல் 14, 2022 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமம் பாண்டேபோகர், பஞ்சாயத்து ரவுனா, வார்டு எண் 13, வட்டம் குராரு மற்றும் காவல் நிலையம் கோஞ்ச் என முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில், "ஆதார் - ஆம் குத்தா கா அதிகாரம்" என்றும் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரி சஞ்சீவ் குமார் திரிவேதி பேசுகையில், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண் ட்ரூகாலரில் சில ராஜா பாபுவின் பெயரைக் காட்டுகிறது. இந்த விண்ணப்பம் நிராரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குறும்புத்தனத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் டாமி நாயின் ஆதார் அட்டை புகைப்படம் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

dog-files-application-caste-certificate-bihar

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.