5 வயது சிறுமியை துரத்தி சென்று கடித்து குதறும் நாய் - பதபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி
5 வயது சிறுமியை நாய் ஒன்று துரத்தி சென்று கடிக்கும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், நந்த்வானா பகுதியில் ஆர்யா அகர்வால் என்ற 5 வயது சிறுமியை அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய் ஒன்று விரட்டிச்சென்று சாலையில் தள்ளி கடித்து குதறியது.
विदिशा में कुत्तों का क़हर, नंदवाना मोहल्ले में मासूम बच्ची को गहरे घाव दिये, प्रशासन बेबस @ABPNews @awasthis @pankajjha_ @AshishSinghLIVE @OfficeofSSC @KanoongoPriyank @Manekagandhibjp #Vidisha pic.twitter.com/tQCKoPzN1i
— Brajesh Rajput (@brajeshabpnews) April 16, 2022
இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாயை விரட்டி வலியால் துடுத்துடித்த சிறுமியை மீட்டனர்.
அதேபோல் புல்கித் மாலி என்ற 6 வயது சிறுவனையும் திலக் சௌக் ஜாமா மஸ்ஜித் பகுதியில் வைத்து நடு ரோட்டில் நாய் ஒன்று கடித்துள்ளது.
இது குறித்து பேசிய அம்மாநிலத்தின் விதிஷா மாவட்ட மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் சமீர் கிரார், இது வரை 54 பேர் நாய்க்கடியால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் ,
நேற்று வரை 30 பேரும் இன்று மட்டும் 14 பேரும் நாய்க்கடியால் அனுமதிக்கப்பட்டு ரேபிஸ் நோய்க்கான ஊசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாய்க்கடியால் பலத்த காயமடைந்த நான்கு பேருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்கள் மக்களை துரத்திச்சென்று கடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.