200 நாய், பூனைகள் ஆப்கானிலிருந்து மீட்பு
பிரிட்டன் நாட்டை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர், ஆப்கானிஸ்தானில் தவித்துக் கொண்டிருந்த 200 நாய் மற்றும் பூனைகளை மீட்டு, விமானத்தில் லண்டனுக்கு அழைத்துச் சென்றார்.
கடந்த சில நாட்களாக ஆப்கானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.அமெரிக்கா படைகள் திரும்பப்பெறப்பட்ட நிலையில் ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து மக்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில் தாலிபான்கள் காபூல் விமான நிலையத்திற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் பிரிட்டன் கடற்படையின் முன்னாள் வீரர் ஒருவர், லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் ஆப்கான் தலைநகர் காபூல் வந்தார்.
ஆதரவின்றி சுற்றித் திரிந்த 200 நாய் மற்றும் பூனைகளை மீட்டு விமானத்தில் ஏற்றிக் கொண்டு லண்டனுக்கு நேற்று அழைத்துச் சென்றார்.