சிறுத்தையை கடித்து குதறிய தெருநாய் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ காட்சிகள்!
தெருநாய் ஒன்று சிறுத்தையைத் தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குதறிய நாய்
மகாராஷ்டிரா, நிபாத் பகுதியில் சிறுத்தை ஒன்று அப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. அப்போது, தெருநாய் ஒன்று உடனடியாக சிறுத்தையை கடுமையாகத் தாக்கி,
அதன் கழுத்தில் கவ்விக் கொண்டு சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில் சிறுத்தை காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியது.
சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள், காயமடைந்த சிறுத்தை அருகிலுள்ள வயல்வெளிக்குள் பின்வாங்கியதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் வசிக்கும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சிறுத்தை தப்பி ஓட்டம்
இதற்கிடையில் தெருநாய்கள் குறித்த விவாதம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான சிறப்பு அமர்வு,
தடுப்பூசி போடப்பட்ட தெருநாய்களை டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள காப்பகங்களிலிருந்து வெளியே விடக்கூடாது என்ற முந்தைய உத்தரவை மாற்றியமைத்தது.