லிப்டில் சிறுவனை கடித்த நாய் - துடிதுடித்த போது வேடிக்கை பார்த்த பெண்
லிப்டில் சிறுவனை நாய் கடித்து துடிதுடித்து அழுதபோது அதை வேடிக்கைப் பார்த்த பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை கடித்த நாய்
காசியாபாத், ராஜ்நகர் அருகே சார்ம்ஸ் கவுண்டி சொசைட்டியில் லிப்டில் ஒரு சிறுவனும், பெண் தன்னுடைய வளர்ப்பு நாயுடன் ஏறியுள்ளார். அப்போது, லிப்டில் வளர்ப்பு நாய் அச்சிறுவனின் தொடையில் கடித்தது. இதனால், அச்சிறுவன் வலியால் கதறி துடிதுடித்து அழுதுள்ளான். ஆனால், எதுவுமே நடக்காததுபோல் அச்சிறுவன் அழுவதை நாயின் உரிமையாளர் வேடிக்கைப் பார்த்துள்ளார். பின்னர் லிப்ட் கதவு திறந்தபோது நாயுடன் வெளியே சென்றுவிட்டார்.
போலீசார் வழக்குப் பதிவு
இது குறித்து பெற்றோரிடம் அச்சிறுவன் நடந்ததை கூற, பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது லிப்டில் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து அப்பெண் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Viral video from Charms county society, Rajnagar, #Ghaziabad: Pet dog bites a boy in lift but instead of caring to child's pain, owner walks away carelessly. FIR registered against woman on complaint of parents.#UttarPradesh #Rajnagar pic.twitter.com/6KVB9HMIJ2
— Kaffir is Back. (@Kaffiro1) September 6, 2022