நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா :மனதை உருக வைத்த சம்பவம்!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அம்பாபுரம் கிராமத்தை சேந்தவர் ஞான பிரகாச ராவ். இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.தனது பிள்ளைகளை கவனிப்பது போல கடந்த 9 வருடமாக அந்த நாயை ஞான பிரகாச ராவ் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வளர்த்த நாய்உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது.
நாயின் மறைவு ஞான பிரகாச ராவ் மட்டுமல்ல அவரது குடும்பத்தையே சோகத்தில் தள்ளியது. மிகவும் செல்லமாக வளர்த்த தனது ஆசை நாயினை மனிதர்களை அடக்கம் செய்வது போல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தார்.
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நாயின் நினைவு தினத்தன்று ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார் ஞான பிரகாச ராவ்.
இந்த நிலையில் வளர்ப்பு நாயின் 5-வது ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.
வளர்ப்பு நாயின் நினைவினை போற்றும் வகையில் நாய் உருவத்தில் வெண்கல சிலை செய்தார் ஞான பிரகாச ராவ். 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் நாயின் உருவ சிலையை வைத்து மாலை அணிவித்து அதற்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வு குறித்து கூறும் ஞானபிரகாச ராவ் நாங்கள் வளர்ப்பு நாயை ஒரு குழந்தை போன்று கவனித்துக் கொண்டோம்.
எங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. இந்த வெண்கல சிலை அந்த நாய்க்கு எங்களால் முடிந்த சிறு செயல்தான் என கூறியுள்ளார் .