நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணம் நினைகின்றதா...ஆட்டை பிரிய முடியாமல் லாரி பின்னால் செல்லும் நாய்!
தன்னுடன் சேர்ந்து வளர்ந்த ஆட்டை பிரிய மனமில்லாமல் நாய் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் விவசாயி ஒருவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கொட்டகையில் வளர்த்து வந்துள்ளார்.
அதோடு சேர்த்து நாயை ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளுடன் நாய் நட்பாக பழகி ஒன்றாக சேர்ந்து வளர்ந்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்த விவசாயி, ஆடுகளை விற்றுள்ளார்.
அப்போது ஆடுகளை லாரியில் எடுத்து செல்லும் போது, ஆடுகளை பிரிய மனமில்லாத நாய், அந்த லாரியை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பின் தொடர்ந்துள்ளது.
ஆடுகளை பிரிய மனமில்லாமல் நாய் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.