முதலமைச்சருக்கு சவுக்கடி கொடுத்த சம்பவம் - எதற்காக அடி வாங்கினார் தெரியுமா?

Viral Video Chhattisgarh
By Thahir Oct 25, 2022 05:14 PM GMT
Report

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு துர்க் என்ற இடத்தில் சவுக்கடி கொடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் ஊக்குவிப்பு 

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 12-வது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவிகளை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்துச் சென்று கௌரவப்படுத்தி வருகிறார்.

இதுபோன்று தனது மாநில நலனுக்கு தேவையான பல விஷயங்களை முன்னெடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கவுரி - கரா பூஜையில் அவர் கலந்து கொண்டார்.

ஆண்டுதோறும் அம்மாநிலத்தில் இப்பூஜை சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சவுக்கால் அடிக்கும் சடங்கு ஒன்று நடத்தப்பட்டது.

முதலமைச்சருக்கு சவுக்கடி 

இதில் பாகல் பங்கேற்றார். அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. குஷ் எனப்படும் ஒரு வகை புற்களை கொண்டு இந்த சவுக்கு தயாரிக்கப்படுகிறது.

முதலமைச்சருக்கு சவுக்கடி கொடுத்த சம்பவம் - எதற்காக அடி வாங்கினார் தெரியுமா? | Does The Chief Minister Know Why The Whip

இதன்படி நபர் ஒருவர் சவுக்கை கொண்டு பாகலின் வலது கையில் ஓங்கி வேகமுடன் அடிக்கிறார். அவற்றை அவர் பொறுமையாக ஏற்று கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது மேளதாளங்கள் உள்ளிட்ட இசை கருவிகளும் பின்னணியில் இசைக்கப்பட்டன. சவுக்கடி பெற்றால் ஆசியும், வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.