அவமானப்படுத்தினாரா..? ரஷ்மிகாவை கண்டுக்காமல் சென்ற ஷ்ரத்தா கபூர்..வைரல் வீடியோ.!
அண்மையில் நடைபெற்ற அம்பானியின் விநாயகர் சதுர்த்தி விழாவில், நடிகை ரஷ்மிகாவை பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் புறக்கணித்தது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
பாலிவுட் vs தென்னிந்திய படங்கள்
தென் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பலரை பாலிவுட் நட்சத்திரங்கள் கண்டுகொளவ்து இல்லை என்ற கருத்து நீண்ட காலமாகவே நிலவி வருகின்றது. ஆனால், அந்த கருத்துக்கள் தற்போது பெரிதாக ஈடுபடவில்லை என்றே சொல்லலாம்.
தென்னிந்திய சினிமாக்களின் அசாத்திய வளர்ச்சி பாலிவுட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தான் உள்ளது. காரணம் சில காலமாக இந்திய அளவில் மிக பெரிய வெற்றியை பதிவு செய்த படங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவையே. பாகுபலி, கே.ஜி.எஃப், காந்தாரா, புஷ்பா போன்ற படங்கள் சற்று பாலிவுட்டை அசைத்து பார்த்துள்ளன.
ஆனாலும், நாம் ஊர்களில் இருந்து செல்லும் பலரும் பாலிவுட் நட்சத்திரங்களில் அவமதிக்கப்பட்டே வருகின்றனர். இதனை வெளிப்படையாக நடிகர் சிரஞ்சீவி சில ஆண்டுகள் முன்பு மேடையிலேயே கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆனால், சில சமயங்களில் இது தொடரத்தான் செய்கிறது.
அவமதித்தாரா ஷ்ரத்தா..?
தற்போதும் அவ்வாறான ஒன்றே நடைபெற்றதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற அம்பானி வீட்டின் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இந்திய திரைஉலகமே பங்கெடுத்து கொண்டனர்.
அந்தளவிற்கு நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். அதில் நடிகை ராஷ்மிகா மந்தனா விழாவிற்கு வரும் போது அவர் எதிரே பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் வந்தார். உடனடியாக ராஷ்மிகா அவரை பார்த்து சிரித்தாலும், ஷ்ரத்தா கபூர் நடிகை ராஷ்மிகாவை கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்தும் படி கடுப்பான முகத்துடன் ராஷ்மிகாவை கடந்து சென்றுவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Has Shraddha Kapoor intentionally ignored Rashmika Mandanna? ?? pic.twitter.com/LppYTRYNb3
— ????❤️? (@QHDposts) September 19, 2023