நீரிழிவு நோயால் இனி பயம் வேண்டாம்.. இந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும்
ஒரு மனிதனுக்கு உணவு கட்டுப்பாடு என்பது அவசியம். உணவு பழக்க வழக்கங்கள் சரியாக நாம் பின்பற்றாத நேரத்தில் நமக்கு நிறைய பாதிப்புகள் 30 வயதை கடக்கும் பொழுது தொடங்கி விடுகிறது.
அதில் மிக்க முக்கியமானது நீரிழிவு நோய். இந்த நோயானது மரபணு ரீதியாக வரக்கூடியது என்று மருத்துவர்கள் சொன்னாலும் பல நேரங்களில் நம்முடைய உணவு முறை சரியில்லாத காரணத்தினாலே வருகிறது.
அப்படியாக, நீரழிவு நோய் இருக்கின்றவர்கள் எவ்வாறு ஒரு சில உணவுகளை, பழங்களை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று இருக்கிறதோ. அதை போல் ஒரு சில முக்கியமான உணவுகளை அவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

அதில் முதன்மை வகிக்கக்கூடியது நாவல் பழம். காரணம் இந்த நாவல் பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருக்கிறது. இவை இரண்டும் தான் ஒரு மனிதனுக்கு ஆரோக்கியத்தை வலுவாக கொடுக்கக்கூடியது.
அதனால் இந்த நாவல் பழமானதை ஒருவர் எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்களுடைய சர்க்கரை அளவை அது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கு உதவியாக அமைகிறது. அதனால் நீரிழிவு நோய் இருக்கக்கூடியவர்கள் தினமும் ஒரு பத்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வரலாம்.
அதை குறிப்பாக மதிய உணவிற்கு பிறகு எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இந்த நாவல் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் வராமலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இருப்பினும் நாவல் பழத்தை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை மட்டும் தவிர்த்து விட வேண்டும்.

நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. நாவல் பழத்தில் இருக்கின்ற ஜாம்போலின் மற்றும் எலாஜிக் அமிலம் சேர்மங்கள் நம்முடைய ரத்தத்தில் மெதுவாக கலக்க உதவுகிறது. இதனால் நம் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கும், செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கும் உதவியாக இருக்கிறது.
2. நாவல் பழம் ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தது. இதனால் உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை குறைத்து கல்லீரலை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
3. அதோடு நாவல் பழம் மிகவும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதாவது நாவல் பழத்தில் சுமார் 25 வரை தான் கிளைசெமிக் இருக்கிறது. இவை திடீரென நம்முடைய உடலில் சர்க்கரை உயர்வதை தடுக்கிறது.

4. நீரழிவு நோய் இருப்பவர்கள் கட்டாயம் அவர்களுடைய இதயத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நாவல் பழத்தில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.
5. நாவல் பழத்தை டைப் 2 நீரழிவு நோயாளிகள் முறையாக எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்கள் உடலில் இன்சுலின் உணர் திறனை மேம்படுத்த உதவும். அதனால் அவர்கள் சரியாக சர்க்கரை பயன்படுத்துவதை அவர்களுடைய உடல் உறுதி செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.