தடுப்பூசி போட்ட பின்னரும் கொரோனா வருவது ஏன்? மருத்துவர் விளக்கம்
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும், கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணிராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டவுடனே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது, எதிர்ப்பு சக்தி உருவாகக்கூடிய இடைப்பட்ட காலத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடலாம்.
எனவே கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், இரண்டு தவணையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே முழு பயன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு காய்ச்சல் வருவது சாதாரணமான ஒன்று என்றும், தடுப்பூசி போட்டவுடன் 72 மணிநேரத்துக்கு மது அருந்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.