மருத்துவர்களின் கொரோனா காப்பீட்டை ரத்து செய்ததா மத்திய அரசு?

India Corona Insurance IMA
By mohanelango Apr 19, 2021 09:30 AM GMT
Report

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி புதிய பாதிப்புகள் மற்றும் மரணங்கள் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.

இந்நிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கியிருந்த காப்பீட்டை ரத்து செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கொரோனா பேரிடர் இந்தியாவில் வந்தபோதே மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 

கொரோனா பணியில் உயிரழப்பவர்களின் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பழைய காப்பீடு திட்டம் மாற்றி தான் அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதற்காக புதிய காப்பீடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.