Friday, Jul 25, 2025

நடிகை சித்ரா மது குடிப்பாரா? - வெளியான முக்கிய தகவல்..!

V. J. Chitra
By Thahir 3 years ago
Report

நடிகை சித்ரா மது குடிப்பாரா என்ற கேள்விக்கு அவரது தாய் பதில் அளித்துள்ளார். பிரபல வி ஜேவாக இருந்து வந்த சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்றவர் சித்ரா.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தனியார் ஹோட்டல் அறையில் இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை சித்ரா மது குடிப்பாரா?  - வெளியான முக்கிய தகவல்..! | Does Actress Chitra Drink Alcohol

சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம்,அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் யார் என்று வெளிப்படுத்தினால் என் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என அந்த கும்பல் மிரட்டுகிறது என அவரது கணவர் ஹேம்நாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் பெற்றோர், சித்ரா இறந்து ஓராண்டு ஆன நிலையில் ஹேமந்த் தற்போது சித்ராவை பற்றி அவதூறு பரப்பி வருவது ஏன்?

இவ்வளவு நாட்களாக கோமாவில் இருந்தாரா அல்லது குடித்துவிட்டு போதையில் இருந்தாரா? இப்போது ஏன் பேச வேண்டும்?.

சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு என்பது அவனுக்குதான் தெரியும் என அவரது பெற்றோர் பரபரப்பு புகார் அளித்தனர்.

மேலும் தன் மகள் சித்ரா மது குடிக்க மாட்டார் என தெரிவித்த அவர்கள்,நள்ளிரவு நேரத்தில் மது குடித்திருந்தால் அவள் எப்படி தனி ஆளாக காரை ஓட்டி வீட்டு வந்திருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.