தமிழ்நாட்டில் அரசு இருக்கிறதா?.., குழந்தை மரணம் குறித்து கனிமொழி கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில், வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
இந்த பகுதியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை வன்கொடுமைக்கு ஆளான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ள நிலையில், மேலும் 3 நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெளியிட்ட பதிவு..,
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 15, 2026
பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும்…
பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என்று தெரிவித்துள்ளார்.