பிரதமர் மோடி குறித்த ஆவண படம்; கண்ணியத்துக்கு இழுக்கு - கண்டித்த ரிஷி சுனக்!

Narendra Modi India Rishi Sunak England
By Sumathi Jan 20, 2023 07:01 AM GMT
Report

இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆவண படம்

குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் கூறப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி குறித்த ஆவண படம்; கண்ணியத்துக்கு இழுக்கு - கண்டித்த ரிஷி சுனக்! | Documentary On Modi Rishi Sunak Condemnation

யூடியூபில் வெளியான இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் 2-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “இந்தியாவுக்கு எதிராக ஆவணப் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ரிஷி சுனக் கண்டிப்பு

பிபிசி ஆவண படத்தில் பாரபட்சம், காலனி ஆதிக்க மனப்பான்மை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்த ஆவண படம் கண்ணியமானது இல்லை” என்றார். மேலும், பிபிசி ஆவண படம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட எம்.பி.இம்ரான் ஹூசைன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரதமர் ரிஷி சுனக் குறுக்கிட்டுப் பேசுகையில், “குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம்.

ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.