மிலிட்ரி டாக்டர்..? மீண்டும் மனித கடத்தல் கதையா ? : சிவகார்த்திகேயனின் டாக்டர் ட்ரெய்லர் வெளியானது!
நடிகர்கள் சிவகார்த்திகேயன், வினய் , யோகி பாபு நடித்து கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்க.படம் வருகின்ற 9 அக்டோபர் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனோ பரவல் திரைப்படம் ரிலீஸாகவில்லை. ஆகவே டாக்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்திகள் வெளியாக ஆனால் இது குறித்த எந்த அறிவிப்பையும் சிவகார்த்திகேயன் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் டாக்டர் திரைப்படமானது வருகின்ற 9 அக்டோபர் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெலியாகியுள்ளது.
காக்கி சட்டை படத்தில் வருவது போல மனிதக் கடத்தலை கதை கூறுவது போல படத்தின் ட்ரெய்லர் உள்ளது, சிவகார்த்திகேயன் நடித்தஹீரோ படம் கடந்த 2019 திரையரங்கில் வெளியானது அதன்பிறகு ஏறக்குறைய 2 வருடங்களுக்கு பிறகு டாக்டர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.