கொரோனா வார்டில் பணியாற்றும் 16 மருத்துவர்கள், 9 செவிலியர்களுக்கு கொரோனா..! - சிகிச்சை அளிப்பதில் சிக்கல்..!
மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ரயில்வே மருத்துவமனை கொரோனோ வார்டில் பணியாற்றும் 16 மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் 1,000 முதல் 1,300 பேர் வரை கொரோனோவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுகைகள் நிரம்பியுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ரயில்வே மருத்துவமனை கொரோனோ வார்டில் பணியாற்றி வந்த 16 அரசு மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ தொற்று ஏற்படுவது சிகிச்சை அளிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.