50 சிறுமிகளை சீரழித்த மகன் - வேடிக்கை பார்த்த தலைமை ஆசிரியர் தாய்!
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
திருச்சியில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாய ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் சாம்சன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சில மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
மருத்துவர் கைது
அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் சாம்சன் மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பது போல் கடந்த ஆறு மாதங்களாக சாம்சன் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
உடனே போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவிகளுக்கு சாம்சன் பாலியல் தொல்லை அளித்ததும், அதற்கு உடந்தையாக கிரேஸ் சகாயராணி இருந்ததும் உறுதியானது.
தற்போது இருவரையும் மூன்று நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.