தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு ஃபெவிக்குவிக் தடவிய மருத்துவர் : வெளியான அதிர்ச்சி தகவல்

By Irumporai May 07, 2023 09:24 AM GMT
Report

தலையில் அடிபட்ட சிறுவனுக்கு ஃபெவிக்குவிக் தடவிய மருத்துவரின் மருத்துவமனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

கட்டுபதிலாக ஃபெவிக்குவிக்

   தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐசா என்ற பகுதியில் விளையாடு கொண்டிருந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவரிடம் அந்த சிறுவனின் பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுவனுக்கு தையல் போடாமல் மருத்துவர் ஃபெவிக்குவிக் தடவியதாக தெரிகிறது. மருத்துவரின் செயலால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு ஃபெவிக்குவிக் தடவிய மருத்துவர் : வெளியான அதிர்ச்சி தகவல் | Doctor Use Feviquick For Treatment

இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது ஃபெவிக்குவிக் தடவியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.