சிங்கத்துக்கு கொரோனா.. கவனமாக இருக்க வேண்டும் - மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை

Corona Vandalur Zoo Lion
By mohanelango Jun 06, 2021 01:50 PM GMT
Report

சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று வண்டலூர் பூங்காவிற்கு நேரில் சென்று பதிலளித்தார். 

சிங்களை எவ்வாறு கொரோனா தாக்கியது என்பது புதிராக இருப்பதால் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மருத்துவர் சிவராமன் சிங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “Reverse zoonosis, "சிங்கத்துக்கு வந்துருச்சாம்ல", எனகடந்து சென்றுவிட முடியாது. மனிதனிடம் இருந்து சிங்கத்துக்குப்போன வைரஸ், மறுபடி மனிதனுக்கு வரக்கூடும். அப்படி வருகையில் புதிய மாற்றுருக்களாகும். அந்த மாற்றுரு இன்னும் தீவிரமாயிருக்கலாம். மிக எச்சரிக்கையாக அணுக வேண்டிய விஷயம்!” என்றுள்ளார்.