245 பெண்களை சீரழித்த மகப்பேறு மருத்துவர், லைப்ல இப்படி ஒரு கேஸை பார்த்ததில்ல - ஷாக்கான நீதிபதி!
மகப்பேறு மருத்துவர் ஒருவர் 245 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர்
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன், இவருக்கு 64 வயது. இவர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.
2012-ம் ஆண்டு முதல் இவரது லீலைகள் குறித்த வெளிவர தொடங்கியது. கடந்த 2017ம் ஆண்டு பல பெண்கள் இந்த டாக்டரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம்சாட்டினர். பின்னர் பலர் போலீசில் புகாரளித்தனர், 2020-ல் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் பணியாற்றிய காலத்தில் மொத்தமாக 200க்கும் மேற்பட்ட பெண்கள், அவரால் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தனர்.
நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், பல வருடங்களாக இவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம். மேலும், இந்த வலக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்டு எம்.பெர்மன் "இது போன்ற வழக்கை நான் இதற்கு முன்பு கண்டதே இல்லை.
இது மிகவும் அசாதாரணமான மற்றும் மோசமான பாலியல் துஷ்பிரயோகம். வன்கொடுமைகளுக்கு அப்பாற்பட்ட கொடூரம்” என்று கூறியுள்ளார். தீர்ப்பு வழங்கிய பின்னர், அந்த டாக்டர் தனது தவறுகளை உணர்ந்து "நான் ஏற்படுத்திய அனைத்து வலிகளுக்கும் நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறி கண்ணீர் வடித்ததாக கூறப்படுகிறது.