மருத்துவரால் HIV பாதித்த சிறுமி - அலறிய குடும்பம்!
மருத்துவரின் கவனகுறைவால் சிறுமி எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
எச்.ஐ.வி
உத்தரப்பிரதேசம், ஈட்டா மாவட்டத்தில் ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு உடல்நலக்குறைவால் சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதித்ததில் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் அந்த சிறுமியை நள்ளிரவில் வெளியேற்றியுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அங்கித் குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
சிறுமிக்கு கொடுமை
அதில், பலருக்கு போடப்பட்ட ஊசியை சிறுமிக்கும் மருத்துவர்கள் செலுத்தியிருப்பதாகவும், இதனால்தான் அவர் எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால், தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான குழு ஈட்டா அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.