விமானத்தில் 14 வயது சிறுமியின் முன் சுயஇன்பம் செய்த இந்திய டாக்டர் - அமெரிக்க FBI எடுத்த அதிரடி முடிவு!
சிறுமியின் முன் தகாத செயலில் ஈடுபட்ட இந்திய-அமெரிக்க டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகாத செயல்
கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி அமெரிக்காவின் ஹொனலுலுவில் இருந்து பாஸ்டனுக்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மசாசூசெட்ஸின் கேம்பிரிட்ஜ் என்ற பகுதியில் வசிக்கும் சுதிப்தா மொஹந்தி (33) என்ற இந்திய-அமெரிக்க டாக்டர் ஒருவர் பயணித்துள்ளார்.
அப்போது டாக்டர் தனது அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த 14 வயதுடைய சிறுமியின் முன்பு சுய இன்பம் செய்து தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.
டாக்டர் கைது
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அநாகரிகமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதிற்காக டாக்டர் சுதிப்தா மொஹந்தி அமெரிக்க சிறப்பு விமான அதிகார வரம்பில் கீழ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த அதிகார பூர்வமான தகவலை பாஸ்டன் எப்பிஐ (FBI) ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர் .
#BREAKING: Today, #FBI Boston special agents arrested Dr. Sudipta Mohanty for allegedly committing lewd acts within the view of a 14-year-old female seated next to him onboard a flight from Honolulu to Boston in May 2022. https://t.co/Rl3dV7ORM2 pic.twitter.com/gLTOFhXR52
— FBI Boston (@FBIBoston) August 10, 2023
இந்நிலையில் கைது செய்யப்பட டாக்டர் பாஸ்டனில் உள்ள பெடரல் நீதி மன்றத்தில் முதலில் ஆஜரானதை அடுத்து நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் டாக்டர் சுதிப்தா மொஹந்திக்கு 90 நாட்கள் சிறை, ஒரு வருட கண்காணிப்பும், அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது