Wednesday, May 14, 2025

ஒரே கிளிக்தான்.. பல லட்சம் அபேஸ் - யூட்யூப் வீடியோ பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!

Youtube Tamil nadu Social Media
By Swetha 6 months ago
Report

யூடியூப் வீடியோ மூலம் மோசடி கும்பலிடம் மருத்துவர் பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரே கிளிக்..

தமிழகத்தை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் பங்குச்சந்தை குறித்த யூடியூப் விளம்பரம் ஒன்றை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர், அரசு மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிப்புரிந்து வருகிறார்.

ஒரே கிளிக்தான்.. பல லட்சம் அபேஸ் - யூட்யூப் வீடியோ பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த அவலம்! | Doctor Got Scamed On Youtube Video Lost Rs 75Lakhs

இவர் அண்மையில் யூடியூபில் பகிரப்பட்ட ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விளம்பரத்தைப் பார்த்து அதில் வரும் லிங்க்கை கிளிக் செய்திருக்கிறார். அந்த லீங்க் மூலம் ஒரு வாட்ஸ்அப் குழுவில் அவர் இணைக்கப்பட்டார்.

அப்படியாக இந்த குழுவில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் பல இருந்ததால் அவர்களிடமிருந்து வர்த்தகத்தைக் கற்றுக்கொள்ளலாம் என நம்பியுள்ளார். ஆரம்பக் கட்டத்தில் வாட்ஸ்அப் குழு மருத்துவருக்கு ஆன்லைன் வர்த்தகம் பற்றி கொஞ்சம் அறிமுகப்படுத்தியது.

இதனால் நம்பிக்கை கொண்ட அவர், அந்தக் குழு "திவாகர் சிங்" என்ற ஒருவரால் நிர்வகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர் குழுவின் மீது நம்பிக்கை வைத்து முதலீட்டு வாய்ப்புகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

யூடியூப் சேனல்..மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாத்தியம் - சொகுசாக வாழும் லாரி டிரைவர்!

யூடியூப் சேனல்..மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாத்தியம் - சொகுசாக வாழும் லாரி டிரைவர்!

 மருத்துவர்

அப்போது மோசடி கும்பல் அவரை பங்கு வர்த்தகத்திற்காகக் ஒரு ஆன்லைன் தளத்தில் கணக்கைத் திறக்க வற்புறுத்தியுள்ளது. இவற்றில் முதலீடு செய்தால் 30 சதவீத லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். அதை கேட்ட மருத்துவரும் மூன்று வாரங்களுக்குள் கிட்டத்தட்ட ரூ.76.5 லட்சத்தை மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார்.

ஒரே கிளிக்தான்.. பல லட்சம் அபேஸ் - யூட்யூப் வீடியோ பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த அவலம்! | Doctor Got Scamed On Youtube Video Lost Rs 75Lakhs

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தனது கணக்கில் இருந்து ரூ.50 லட்சத்தை எடுக்க முயன்றபோது, ​​அந்தப் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டிருப்பது புரிந்த மருத்துவர் உடனே போலீசாருக்கு இது குறித்து புகார் அளித்துள்ளார்.

போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சமீபத்திய மாதங்களில், இதுபோன்ற போலியான பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டங்களுக்கு பலியாகி

பணத்தைப் பறிகொடுத்த வழக்குகள் பல பதிவாகியுள்ளன. எனவே விரைவாக அதிக லாபம் பெறலாம் என உறுதியளிக்கும் ஆன்லைன் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளனர்.