பெண்ணின் காதிற்குள் உயிரோடு இருந்த சிலந்தி - உஷாரா இருங்க மக்களே...!
spiderinside
By Petchi Avudaiappan
சீனாவில் பெண்ணின் காதிற்குள் உயிரோடு சிலந்தி இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தெற்கு சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சூஜோவைச் சேர்ந்த யி என்ற பெண், காதிற்குள் விசித்திரமான சத்தம் கேட்டதாலும் வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டதாலும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவரது காதிற்குள் உயிரோடு சிலந்தி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவரது காதிற்குள் ஒரு கேமராவை வைத்து பார்த்த போது அந்த சிலந்தி லென்ஸை நோக்கி வந்துள்ளது. அதன் அளவு மிகவும் பெரியதாக இருந்துள்ளது. இதனிடையே எலெக்ட்ரிக் ஓட்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி சிலந்தியை அவரது காதிலிருந்து டாக்டர் அகற்றியுள்ளார்.