தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சாம்ராஜ் மாவட்டத்தில் காரோண தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு காரோண பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் தற்போது கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதனையடுத்து அவர்கள் 5 பெரும் தற்போது தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.