காலையில் கோழி கூவி தொந்தரவு செய்கிறது - காவல்நிலையத்தில் மருத்துவர் புகார்

Viral Photos
By Thahir Dec 01, 2022 09:56 AM GMT
Report

காலை வேளையில் பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் கோழிகள் கூவுவதை தடுக்க வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விடிந்துவிட்டதை மக்கள் கோழி கூவுவதை வைத்து தான் கிராம மக்கள் கண்டுபிடித்து எழுந்து தங்களது நாளை தொடங்கி வேலைகளை செய்து வந்தனர்.

பிறகு காலம் மாற, மாற தொழிநுட்பம் வளர்ச்சி காரணமாக அலாரம், செல்போன் அலாரம் போன்றவை வந்ததால் வீடுகளில் கோழிகள் இல்லா நாட்களாக மாறிவிட்டது இன்றைய காலம்.

கோழி கூவக் கூடாது மருத்துவர் புகார் 

இந்த நிலையில் பக்கத்து வீட்டுப் பெண்மணி வளர்க்கும் கோழி, அதிகாலை 5 மணியிலிருந்து கூவத் தொடங்குவதாகவும், நள்ளிரவில் பணி முடிந்து வீட்டுக்கு வரும் தனக்கு இது மிகப்பெரிய தொந்தரவாக இருப்பதாகவும் மருத்துவர் புகார் அளித்துள்ளார்.

Doctor complains that rooster crowing is bothersome

இருதரப்பையும் காவல்துறையினர் அழைத்துப் பேசியுள்ளனர். ஆனால் ஒருவரும் வழக்கு வராததால் பொதுவிடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கோழி வளர்ப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சூழநிலைக்கு காவல்துறையினர் உள்ளாக வேண்டியதாயிற்று என்கின்றன தகவல்கள்