நோயாளியை மோசமாக தாக்கிய மருத்துவர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Crime Himachal Pradesh
By Sumathi Dec 23, 2025 03:49 PM GMT
Report

மருத்துவமனையில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தாக்கிய மருத்துவர்

இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நோயாளியை மோசமாக தாக்கிய மருத்துவர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ | Doctor Beat Up Patient Treatment Himachal

அதில், குப்வி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் பன்வார் என்ற நோயாளி என்டோஸ்கோபிக்காக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி (IGMC) மருத்துவமனைக்கு வந்திருந்தார். பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு 2 மணி நேரம் காத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நேரத்தில், அவருக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டதால், நுரையீரல் மருத்துவப் பிரிவு வார்டுக்குச் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டார். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் ஒரு ஆக்சிஜன் மாஸ்க்கை பொருத்திக் கொண்டிருந்தனர்.

7 மாத கர்ப்பிணி மகளுக்கு தந்தை செய்த கொடூரம் - பதைபதைக்க வைக்கும் சம்பவம்

7 மாத கர்ப்பிணி மகளுக்கு தந்தை செய்த கொடூரம் - பதைபதைக்க வைக்கும் சம்பவம்

நிர்வாகம் நடவடிக்கை

அப்போது அங்கு இருந்த மருத்துவர் முதலில் நோயாளியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அறிக்கை கோரியது மற்றும் விசாரணைக்காக ஒரு குழுவை அமைத்தது. இதனையடுத்து அரசின் உத்தரவையடுத்து, அந்த மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஒரு சில மணி நேரங்களுக்குள்ளேயே முடிவு எடுக்கப்பட்டதாகவும், அந்த குழுவின் விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டாக்டர் ராவ் கூறியுள்ளார்.