கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் மாதவன்

tamil flim Alai Payuthey
By Jon Feb 20, 2021 03:34 AM GMT
Report

அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் மாதவன். இவர் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாறா' படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. மலையாளத்தில் ஹிட் அடித்த 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக் தான் மாறா.

தற்போது 'ராக்கெட்ரி விளைவு' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதனையடுத்து, தற்போது மாதவனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவரின் கலைச் சேவையை பாராட்டி, கோலாப்பூரில் உள்ள டி.ஒய். பாட்டில் பல்கலைக்கழகம் மாதவனுக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியிருக்கிறார்கள். அவரவர் துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களுக்கே இந்த பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.

இந்தப் பட்டத்தை மாதவன் பெற்றுள்ளதை அடுத்து திரைத்துறை பிரபலங்களும், நண்பர்களும் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதை தனது சமூக வலைத்தளத்தில் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் மாதவன் பதிவிட்டிருக்கிறார்.


Gallery