கிளினிக்கில் பெண் ஊழியருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட அரசு மருத்துவர் - அதிரவைக்கும் வீடியோ
கோவில்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில் தற்காலிக பெண் ஊழியருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தலில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு மருத்துவராகப் பணியாற்றுபவர் அதே ஊரைச் சேர்ந்த 51 வயதான குருசாமி என்பவர் இளையரசனேந்தலில் தனியாக ஸ்ரீமுத்தையா கிளினிக் என்ற பெயரிலும் மருத்துவமனை நடத்தி வருகின்றார்.
இதனிடையே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர்களிடம் இவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து வருவதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் உயரதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியருடன் பணி நேரத்தில் பணியிடத்திலேயே மருத்துவர் குருசாமி உல்லாசமாக இருந்துள்ளார் .
அந்தக் காட்சியை இன்னொரு பெண் பணியாளர் பார்த்து விட அன்று முதல் அவரை வாசலில் காவலுக்கு இருக்கும்படி குருசாமி நிர்ப்பந்தம் செய்துள்ளார். குருசாமியின் வக்கிரங்களைத் தட்டிக் கேட்காமல் இருப்பவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் கிடைக்க, தட்டிக்கேட்டவர்களுக்கோ அதிகாரத்தைப் பயன்படுத்தி கடும் நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் பாலியல் உறவில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குருசாமியால் பாதிக்கப்பட்ட பெண், கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குருசாமியின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.