டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று உச்சபட்சமாக ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் நோயாளிகள் உயிரழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில் டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு மருத்துவர் உள்பட 8 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
டெல்லி மருத்துவமனைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.