மாலத்தீவு, இந்தோனேசியா இல்ல.. ஹனிமூனுக்கு சிறந்த நாடு எது தெரியுமா?தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
ஹனிமூனுக்கு சிறந்த இடமாக உள்ள நாடு எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஹனிமூன்
திருமணமான புது தம்பதிகள் ஹனிமூனுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது தங்கள் வசதிக்காக வெளி மாநிலங்களிலும் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்ல முடிவு செய்வர்.
அதிலும் மாலத்தீவு, இந்தோனேசியா, இலங்கை ,அந்தமான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைத் தேர்வு செய்து சென்று வருவர்.ஆனால் ஹனிமூனுக்கு சிறந்த இடமாக உள்ள நாடு எது தெரியுமா? இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இயற்கை அழகு, ஆடம்பரம் ,கலாச்சார செழுமை உள்ளிட்டவற்றைப் பிரமிக்க வைக்கும் தீவு நாடான மொரீஷியஸ் தான் .இது ஆபிரிக்க கண்டத்திற்குத் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு.
சிறந்த இடம்
இங்கு இரவு உணவுகள், ஸ்பா சிகிச்சை ,தங்குமிடங்கள் உள்ளிட்டவை சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. மொரிஷிய ஸில்வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
[
இதனால் புது தம்பதிகள் காதல் வாழ்க்கையைத் தொடங்க நல்ல இடமாக உள்ளது.மேலும் டிரிப் அட்வைசர்ஸ் டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகள் 2025கான உலகின் சிறந்த ஹனிமூன் இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.