கருணாநிதியின் கோபாலபுரம் வீடு யாரோடது தெரியுமா?

M K Stalin M Karunanidhi
By Thahir Aug 28, 2022 01:18 PM GMT
Report

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு முன்னாள் உரிமையாளர்கள் இன்று வந்த நிலையில் அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கோபாலபுரம் வீட்டின் முன்னாள் உரிமையாளர் 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டின் உரிமையாளராக இருந்த சர்வேஸ்வர ஐயரின் பேத்தி சரோஜா சீதாராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

M K Stalin

சரோஜா சீதாராமன் 17 வயதாகும் போது இந்த வீடு விற்கப்பட்டுள்ளது தற்போது அவருக்கு வயது 86. அப்பொழுது அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், தனது திருமணத்தை கோபாலபுரம் இல்லத்தில் நடத்த கருணாநிதியிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் சம்மதம் தெரிவித்த நிலையில் கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கோபாலபுரம் வீட்டை பார்க்க வேண்டும் என்ற சரோஜா சீதாராமன் ஆசைப்பட்டதாகவும், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

M K Stalin

கலைஞர் கருணாநிதி வாழ்ந்த வீட்டின் உரிமையாளராக இருந்த சர்வேஸ் ஐயர் என்பவர் தான் கோபாலபுரத்து வீட்டின் முன்னாள் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.